ஔரங்கசீப்புக்கு உரிமை இல்லை

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கின் விசாரணையில், அலகாபாத் உயர்நீதிமன்றம், உத்தரப் பிரதேச சன்னி வக்பு வாரியம், அந்த நிலம் தொடர்பான அனைத்து ஆவண ஆதாரங்களையும் வழங்க உத்தரவிட்டது. இவ்வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் ரஸ்தோகி,  ‘வரலாற்றின்படி, 1669ல், ஔரங்கசீப், காசி விஸ்வநாதர் கோயிலை இடித்து ஞானவாபி மசூதியைக் கட்ட உத்தரவிட்டார். அந்த நிலம் சுயம்பாக வெளிப்பட்ட இறைவன் விஸ்வேஷ்வருக்கு சொந்தமானது என்பதால் அந்த நிலத்தை கையகப்படுத்த ஔரங்கசீப்பிற்கு எந்த உரிமையும் இல்லை. முகலாய ஆட்சியாளரால் இடித்துத் தள்ளப்பட்ட பழங்காலக் சிவன் கோயிலின் ஆதாரம், தற்போதுள்ள மசூதியின் அடியில் இருப்பதால் அங்கு தொல்பொருள் ஆய்வு செய்யப்பட வேண்டும். அந்த நிலம் விஸ்வ நாதருக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்க தேவையான ஆதாரங்களை தொல்பொருள் துறையால் மட்டுமே நிரூபிக்க முடியும்’ என வாதிட்டார். பின்னர், விசாரணையை ஏப்ரல் 29ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.