நவீன ராணுவ விமான பயிற்சி

பாரதம் அமெரிக்காவிடம் இருந்து புதிதாக வாங்கும் அதி நவீன எம்.எச் 60 ஹெலிகாப்டர்களை இயக்கும் பயிற்சி நமது நாட்டு வீர்ர்களுக்கு அமெரிக்காவில் வழங்கப்பட்டது. இந்திய கடற்படையின் முதல் தொகுதி விமானப் படை வீரர்கள் அமெரிக்காவில் இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளனர். அமெரிக்காவின் நார்த் ஐலண்ட், சான்டியாகோவில் உள்ள கடற்படை விமான தளத்தில், இந்த பயிற்சி 10 மாதங்களாக நடைபெற்றது. 2.13 பில்லியன் டாலர் மதிப்பில் 24  எம்.ஹெச் 60 ஆர் வகை நவீன ஹெலிகாப்டர்களை நமது ராணுவத்திற்காக வாங்கும் ஒப்பந்தத்தை 2020 பிப்ரவரியில், அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வருகையின் போது நமது மத்திய அரசு செயல்படுத்தியது. எம்.ஹெச் 60ஆர்,  நமது ஆயுதப் படையில் சேர்க்கப்படும் அமெரிக்காவில் கட்டமைக்கப்பட்ட மூன்றாவது வகை ஹெலிகாப்டர் ஆகும். நமது விமானப்படை ஏற்கனவே 22 அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் 15 சினூக் ஹெவி லிஃப்ட் ஹெலோக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.