யோகிக்கு தோட்டா மிரட்டல்

கடந்த திங்கள் அன்று சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஷாசில் இஸ்லாம் அன்சாரி, முதல்வர் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மிரட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. அந்த வீடியோவில் பேசிய அன்சாரி, “யோகி ஆதித்யநாத் வாயிலிருந்து குரல் வந்தால், எங்களின் துப்பாக்கிகள் புகையை வெளியிடாது; தோட்டாக்களைதான் வெளியிடும்” என்று மிரட்டல் வெளியிட்டு இருந்தார். இதையடுத்து அன்சாரி மீது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கலவரத்தை தூண்டும் நோக்கில் மிரட்டல் விடுத்தது, மோதலை உண்டாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் டெல்லி ராம்பூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்சாரிக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டதாக கூறி மாவட்ட அதிகாரிகள் புல்டோசர் மூலம் அதை இடித்து தரைமட்டமாக்கினர். இதனையடுத்து யோகிக்கு மிரட்டல் விடுத்த எம்.எல்.ஏ அன்சாரி “ஒரு நிகழ்ச்சியில், பலமான எதிர்கட்சியாக இருப்பதால் புகை அல்ல, தோட்டாக்களை வெளியிடும் துப்பாக்கி போன்று அனைத்து விஷயங்களுக்கும் வலுவான பதிலடி கொடுப்போம் என்றுதான் நான் கூறியிருந்தேன்,” யாரோ எடிட் செய்து எனக்கு எதிராக பரப்பி விட்டார்கள்” என பல்டி அடித்துள்ளார்.