மக்களவையில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்து பூமியைப் பற்றிய அறிவியல் ஆய்வுகளுக்காக நிசார் ( NISAR) என்ற செயற்கைக்கோள் பணியை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரோவின் ஆராய்ச்சியை ஆதரிக்கும் வகையில் நாட்டில் மேலும் பல ஆய்வு மையங்களை நிறுவ அரசு உத்தேசித்துள்ளது. தற்போதுள்ள விண்வெளி தொழில்நுட்ப இன்குபேஷன் மையம், விண்வெளிக்கான பிராந்திய கல்வி மையம் ஆகியவை ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ. 200 லட்சம் மானியம் பெறும். இந்திய விண்வெளித் திட்டத்தின் திறனை மேம்படுத்துதல், விண்வெளி அறிவியல் மற்றும் புவி கண்காணிப்பு தரவுத்தளத்தை விரிவுபடுத்துதல், கூட்டு சோதனைகள் மற்றும் தளங்களை உருவாக்குதல், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் வெளிநாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து அரசு திட்டங்களை செயல்படுத்துகிறது’ என கூறினார். 2022ல் திட்டமிடப்பட்டுள்ள இஸ்ரோவின் விண்வெளி பயணங்கள் குறித்த விவரங்களையும் அப்போது அவர் தெரிவித்தார்.