ஜம்மு காஷ்மீரில் இருந்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, பிரதமரின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக சுமார் 2,105 காஷ்மீரி ஹிந்துக்கள் உள்ளிட்ட புலம்பெயர்ந்தோர் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு மீண்டும் திரும்பியுள்ளனர். பள்ளத்தாக்கில் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பலமான பாதுகாப்பு, உளவுத்துறை தகவல்கள், நிலையான காவலர்கள், குழு பாதுகாப்பு, 24 மணி நேர சோதனைப் பணிகள், பயங்கரவாதிகளுக்கு எதிரான வலுவான செயல்பாடுகள் ஆகியவை இதில் அடங்கும் என மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த். ராய் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.