சித்திரை திருவிழாவின் முக்கிய பகுதிகளில் ஒன்று மதுரை வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருள்வது. வரும் ஏப்ரல் 16ல் இந்த விழா நிகழ இருக்கிறது. 2 ஆண்டு கொரோனா பொதுமுடக்கத்திற்குப் பிறகு தற்போது விமரிசையாக நடைபெற இருப்பதால் பக்தர்கள் பேராவலுடன் காத்துள்ளனர். கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது, பக்தர்கள், விசிறி வீசிவது தண்ணீரை துருத்திப் பைகளில் பீய்ச்சி அடிப்பது என வேண்டுதலை மேற்கொள்வார்கள். இப்போது துருத்திப் பைக்கு பதிலாக பிரஷர் பம்ப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள கள்ளழகர் கோயிலின் பாலாஜி பட்டர், பிரஷர் பம்ப் பயன்படுத்துவதால், தொன்மைவாய்ந்த அழகர் சிலையும், அவரது ஆபரணங்களும் சேதமடைய வாய்ப்புள்ளது எனவே, மக்கள் பழைய வழக்கமான துருத்திப் பைகளையே பயன்படுத்துவது நல்லது என கோரிக்கை விடுத்துள்ளார்.