தி.மு.கவை சேர்ந்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் பலமுறை சாதியைச் சொல்லி என்னை அவமானப்படுத்தினார் என்று ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் கூறியிருந்தார். இந்த சர்ச்சையின் எதிரொலியாக ராஜகண்ணப்பனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதே ராஜகண்ணப்பனை சந்திக்க சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு, அவர் அமர பிளாஸ்டிக் சேரை கொடுத்து அவமானப்படுத்தினார் என சில மாதங்களுக்கு முன் பல பத்திரிகைகள் எழுதின. கூட்டணி தர்மத்தைக் கருதி திருமாவளவன் அதனை மறுத்துக் கூறினார் என்பது நினைவு கூரத்தக்கது.