உ.பி’யில் கோயில் மீது தாக்குதல்

உத்தரபிரதேச மாநிலம் கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் பெஹ்லோல்பூர் கிராமத்தில் உள்ள ஒரு ஹிந்து கோயிலில் இரவில் யாரோ சில மர்ம நபர்கள் புகுந்து கோயிலை சேதப்படுத்தி அங்குள்ள சிவலிங்கம் உட்பட கோயில் சிலைகளை உடைத்து அதன் சொத்துக்களை சூறையாடியுள்ளனர். சிவலிங்கத்தின் அருகே ரத்தம் காணப்பட்டது. இதனால் மர்ம நபர்கள் கோயிலில் மாமிசத்தை கொட்டி அசுத்தம் செய்துள்ளனர் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர். அங்கு வந்த காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இது குறித்து பேசிய காவல்துறை ஆணையர், ‘இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. ரத்த மாதிரிகளையும் சேகரித்துள்ளோம். சிலை வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பலகையை உடைத்ததில் குற்றவாளி காயமடைந்துள்ளதாகத் தெரிகிறது. கோயிலில் மாமிச கழிவுகள் கொண்டு வரப்படவில்லை. கோயில் பூசாரி பிணைக் கைதியாக வைக்கப்பட்டார் என்ற மற்றொரு தகவலும் தவறானது’ என தெரிவித்தார்.