கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில் வரலாற்று சிறப்புமிக்க கோட்டே மாரிகாம்பா ஜாத்திரையின் போது அங்கு ஹிந்துக்கள் மட்டுமே கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம்கள் செய்த ஹிஜாப் பிரச்சனை, அதன் பின்னணியில் உள்ள முஸ்லிம் பயங்கரவாத இயக்கங்கள், தேசத்தில் கலவரம் பிரிவினையை ஏற்படுத்தும் அவர்களின் முயற்சி, முஸ்லிம் பயங்கரவாதிகள் பஜ்ரங்தள் உறுப்பினர் ஹர்ஷாவை கொன்றது, நீதிபதிகளை மிரட்டியது உள்ளிட்ட தொடர் பிரச்சனைகளையடுத்து கர்நாடகாவில் உள்ள ஹிந்து அமைப்பினர் ஜாத்திரை நிர்வாகக் குழுவிடம் இந்த கோரிக்கையை வலியுறித்தினர். இதனையடுத்து அக்குழுவும் இன்று துவங்கும் இந்த ஐந்து நாள் திருவிழாவின் போது ஹிந்து கடைக்காரர்களை அனுமதிக்கும் முடிவை எடுத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கோட்டே மரிகாம்பா ஜாத்ராவில், அண்டை நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான ஹிந்துக்கள் பங்குகொள்வார்கள். சமீபத்தில் கர்நாடகாவின் உடுப்பியில் உள்ள ஹோசா மாரிகுடி கோயில் நிர்வாகமும் தனது சுகி மாரிபூஜா விழாவின்போது ஹிந்து விற்பனையாளர்களுக்கு மட்டுமே கடைகளை ஒதுக்க முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.