நவாப் மாலிக்கை ஆதரிக்கும் அரசு

பயங்கரமான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் தொடர்புடைய மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக்,  தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். நவாப் மாலிக்கின் சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள்,முறைகேடாக  நிலம் வாங்குதல் பிரச்சனையில் அவரது மகன் ஃபராஸின் தொடர்பும் கண்டறியப்பட்டுள்ளது. நவாப் மாலிக்கின் பதவி பறிக்கப்பட வேண்டும் என்று பா.ஜ.க உள்ளிட்ட எதிர்கட்சிகள், பொதுமக்கள் போராடி வருகின்றனர். ஆனால், இவ்வழக்கில் நவாப் மாலிக் இடம்பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியும் சிவசேனா தலைமையிலான அரசும் தொடர்ந்து ஆதரித்து வருகிறது. தற்போது மகாராஷ்டிர அரசு வெளியிட்டுள்ள செய்தியில் நவாப் மாலிக் வசம் இருந்த துறைகள் தற்காலிகமாக வேறு அமைச்சர்களுக்கு மாற்றப்படும். எனினும் அவர் அமைச்சராகவே தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியது.