பட்ஜெட் குறித்து ஸ்டாலின்

தமிழக நிதிநிலை அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்க முதல்வர் ஸ்டாலின், ‘இந்த பட்ஜெட் தமிழக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது. இந்த பட்ஜெட் ஒரு மாபெரும் மாற்றத்துக்கான தொடக்கம் என்று நிதி அமைச்சர் சொல்லியுள்ளார். மாற்றத்துக்கானது மட்டுமல்ல, மேன்மையடையும் தமிழகம் என்பதற்கான தொடக்கமாகவே நான் கருதுகிறேன். இதில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்திக் காட்டினாலே உன்னதமான தமிழகம் நம் கண்முன்னே உருவாகிவிடும். அத்தகைய தொலைநோக்குப் பார்வையை இந்த அறிக்கை கொடுக்கிறது. ஒரு சீர்திருத்தவாதியின் மானுடப் பற்றையும் கொண்டதாக இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார். இதனை விமர்சனம் செய்துள்ள நெட்டிசன்கள், ‘மத்திய அரசு திட்டங்களை குறைகூறும் ஸ்டாலின், அதன் மீது தி.மு.கவின் ஸ்டிக்கரை ஒட்டி அதியே நல்ல பட்ஜெட் என கூறி பெருமையடிக்கிறார். முதல்வரே, ஒட்டும் ஸ்டிக்கரை கொஞ்சம் நன்றாக ஒட்டச்சொல்லுங்கள், அது மத்திய அரசின் திட்டங்கள் என நன்றாகவே வெளியே தெரிகிறது’ என கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.