பிரபல மலையாள மொழி பத்திரிகையான ‘மாத்ருபூமி’யின் நூற்றாண்டு விழாவையொட்டி ஓராண்டுகால கொண்டாட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணியளவில் காணொலி மூலம் தொடங்கிவைக்கிறார். மாத்ருபூமி பத்திரிகை 1923ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி தொடங்கப்பட்டது. தேசிய நலன் சார்ந்த செய்திகளை தொடர்ந்து வெளியிட்டுவருவதுடன், சமூக சீர்திருத்தங்கள், வளர்ச்சி ஆகியவற்றை கொண்டு செல்வதிலும் முன்னணியில் உள்ளது. மாத்ருபூமி 15 பதிப்புகள், 11 பருவ இதழ்களுடன் வெளியாகிறது. மேலும் மாத்ருபூமியின் புத்தகப்பிரிவு, சமகால விஷயங்கள் குறித்த ஏராளமான தலைப்புகளில் புத்தகங்களை பதிப்பித்து வருகிறது.