தென்காசி மாவட்டம் கடையத்தில் தற்போது சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பிசான பருவ நெல் அறுவடை முடிந்துள்ளது. அறுவடை செய்த நெல்லை, கொள்முதல் செய்ய வழக்கமாக கடையத்தில் நேரடி கொள்முதல் நிலையத்தை தமிழக அரசு அமைக்கும். ஆனால் தற்போது 5 கி.மீ தள்ளி கானாவூரில் அமைக்கப்பட்டது. விவசாயிகள் ஆட்சியரிடம் முறையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து மீண்டும் கடையத்தில் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டது. அப்போது தி.மு.க நிர்வாகி ஜெயக்குமார் தலைமையில் அங்கு வந்த தி.மு.க குண்டர்கள், விவசாயிகளை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். நெல்லை இங்கு கொண்டுவரக்கூடாது என அதிகாரிகளையும் மிரட்டினர். இதனால் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. காவல்துறையினர் இருதரப்பினரையும் அப்புறப்படுத்தினர். ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், காவல்துறையினர் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்