கடந்த வாரம் வெளியான விவேக் அக்னிஹோத்ரியின் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. நமது தேசத்தில் நடந்த, முந்தைய அரசுகளால் மறைக்கப்பட்ட காஷ்மீர் பண்டிட்டுகளின் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சோக சம்பவத்தை இப்படம் எடுத்துரைக்கிறது. குஜராத், மத்தியப் பிரதேசம், ஹரியானா, கர்நாடகா மாநில அரசுகள் இப்படத்திற்கு வரிவிலக்கு, அரசு ஊழியர்கள் படம் பார்க்க அரைநாள் விடுமுறை போன்றவற்றை அறிவித்துள்ளன. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமீத் ஷா உள்ளிட்டோரும் இப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். இதனால், அரசு இப்படத்தை ஆதரிப்பதாக கூறி சிலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியும் காந்தியும் மட்டுமே சுதந்திரத்திற்காக போராடினர் என்பதை காட்டுவதற்காகவும் மற்ற தலைவர்களை இருட்டடிப்பு செய்வதற்காகவும் 1980ல் எடுக்கப்பட்ட காந்தி திரைப்படத்திற்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் நிதி ரூ. 1 கோடியை அளித்தார். மேலும், இந்திரா காந்தி கொண்டுவந்த மிகக் கொடுமையான அவசர நிலையை நியாயப்படுத்தும் விதமாக அப்போது, ஒரே நேரத்தில் ‘தி பிரைம் மினிஸ்டர்’, ‘கைசா அந்தேரா’, ‘மா கி புகார்’ போன்ற திரைப்படங்களை தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தை கொண்டு தயாரிக்க வைத்தார். அதாவது இந்திரா காந்தி, அரசு நிதியில் தன்னையும் தன் கட்சியையும் வளர்த்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.