மாநிலங்களவையில், கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய், ‘காவல்துறை மற்றும் சட்ட ஒழுங்கு ஆகியவை மாநிலங்கள் சம்பந்தப்பட்டது. என்றாலும், அனைத்து மாநிலங்களுக்கும் காவல்துறை நவீனமாக்கலுக்கு மத்திய அரசு தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகிறது. இதன் காரணமாக மாநிலங்களின் காவல்துறை நவீனயமாக்கத்தில் தொழில்நுட்ப முன்னேற்றம் குறிப்பிடத்தக்க அளவில் நடந்துள்ளது. பல நவீன தொழில்நுட்பங்கள் மாநில காவல் துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன’ என தெரிவித்தார். அவ்வகையில், தமிழகத்துக்கு கடந்த 2016 முதல் 2020வரை 170.54 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.