மூத்த பத்திரிக்கையாளரும் பாஜக உறுப்பினருமான எம்.ஜே. அக்பர், காஷ்மீர் பண்டிட்களின் புலம்பெயர்வு மற்றும் அவலநிலை குறித்து அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி தெரிவித்த கருத்துகளை ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் நினைவு கூர்ந்தார். காஷ்மீர் பண்டிட்டுகளின் வெளியேற்றத்தின் போது நடந்த நிகழ்வுகளால் அன்று நான் மனம் உடைந்துபோனேன். அந்த நிகழ்வுகளை நினைவு கூரும்போதெல்லாம் நான் நடுக்கமாக உணர்கிறேன். ஒரு சமூகம் எப்படி தன் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்வது என்பதை என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக நான் அன்றை ராஜீவ் காந்தி தலைமையிலான அரசிடம் கேள்வி எழுப்பினேன். அப்போது ராஜீவ் அளித்த பதில் முற்றிலும் அரசியல் சார்ந்தது. ‘காஷ்மீரில் ஃபரூக் அப்துல்லாவின் அரசு ஆட்சியில் உள்ளது. நாம் எப்படி அதில் தலையிட முடியும்?’ என கேட்டார். அப்போது அப்துல்லா ராஜீவின் நண்பராக இருந்தார் என அக்பர் தெரிவித்தார். மேலும், அப்போதைய மத்திய அரசின் செயலற்ற தன்மையை கேள்விக்குட்படுத்திய அக்பர், “மத்திய அரசிற்கும் பொறுப்பு உள்ளது. இதுபோன்ற கொடூரமான சம்பவங்கள் நடக்கும் போது, மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது” என கூறினார்.