திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு, செஞ்சியம்மன் நகர் பழங்குடி கிராமத்தில் அருள்மிகு செல்லியம்மன் ஆலயத்தின் காட்டுமான பணிகள் முடிந்து மஹா கும்பாபிஷேகம் இரு தினங்களுக்கு முன் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஊர் தலைவர், நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். கோயில் தரிசனத்தின் முதல் நிகழ்வாக செஞ்சியம்மன் பழங்குடி நகரத்தில் வசிக்கும் சிரஞ்சீவி, இளவரசி ஆகிய மணமக்களுக்கு திருமணம் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி சுமங்கலி பூஜை, கன்யா பூஜை போன்ற நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றன. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பழவேற்காடு சுற்றுவட்டார மக்கள் ஏராளாமானோர் கலந்துகொண்டனர். இந்த கும்பாபிஷேக செலவுகளை “ஷிவசாகரம் அறக்கட்டளை” ஏற்றது. கோயில் கட்டுமான செலவுகளை “சந்த்ராம் நடியாத்” அறக்கட்டளை ஏற்றது. “ஜமுனா அறக்கட்டளை” மூலம் மணமக்களுக்கு மாங்கல்ய தானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா, பூஜைகள், நிகழ்ச்சிகள் அனைத்தையும் சீமா ஜாக்ரான் – சமுத்திர பாரதி தமிழ்நாடு அறக்கட்டளை முன்னின்று மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.