மார்ச் 15 அன்று வெளியான குஜராத்தி திரைப்படமான ‘பிரேம் பிரகரன்’ படம் குஜராத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாக நன்றாக ஓடிக்கொண்டிருந்தது. இந்த நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான சந்திரேஷ் பட் மற்றும் விநியோகஸ்தர் வந்தன் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசம் முதன்மையானது. ஒரு திரைப்படத் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், ஒரு பாரத குடிமகனாகவும்,’ தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் ஒரு திரைப்படம் என்பதைவிட மிகப் பெரியது என நான் உணர்கிறேன். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம். காஷ்மீர் பண்டிட்டுகளின் மன வேதனைகளுக்கு மரியாதை அளிக்கிறோம். எனவே, தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் அதிக திரையரங்குகளில் ஓடுவதற்காக வழி செய்யும்பொருட்டு, நாங்கள் எங்கள் ‘பிரேம் பிரகரன்’ படத்தை திரையரங்குகளில் இருந்து திரும்பப் பெறுகிறோம். விரைவில் மீண்டும் திரையரங்கில் சந்திப்போம். வந்தே மாதரம்” என தெரிவித்துள்ளனர்.