ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அடைந்த படுதோல்வியைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைமையை அமெரிக்கை நாராயணன் கடுமையாக விமர்சித்தார். அவர் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் கேட்டு, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில், அமெரிக்கை நாராயணன் அளித்த பேட்டி ஒன்றில், ‘கட்சித் தேர்தலில் தொண்டர்கள் வேண்டுமானால் ராகுலை தலைவராக தேர்ந்தெடுக்கலாம். ஆனால், மக்கள் அவரை தலைவராக ஏற்கவில்லை. தேர்தலில் வெற்றி பெற அவரிடம் செயல்முறை திட்டம் ஏதும் இல்லை. வலிமையான தலைவருக்குரிய தகுதியும் இல்லை. தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பேற்று ராகுல், பிரியங்கா போன்றவர்கள் கட்சியை விட்டு வெளியேற வேண்டும்; மற்றவர்கள் கட்சி பணி செய்ய வழி விட வேண்டும். காங்கிரஸ் புத்துயிர் பெற கூட்டு தலைமையுடன் இயங்க வேண்டும். நன்கு செயல்படக் கூடிய தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.