காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் காஷ்மீர் இஸ்லாமிய ஜிஹாதிகளின் கோரமுகத்தை தோலுரித்துக் காட்டியுள்ளது. இதேபோல கேரளாவில் நடைபெற்ற மாப்ளா கலவரத்தை மையப்படுத்தி இயக்குனர் அலி அக்பர் (தற்போது தாய்மதம் திரும்பி ராமசிம்மன் என பெயர் கொண்டுள்ளவர்) இயக்கும் திரைப்படம் அடுத்து வெளியாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிரௌட் பண்டிங் முறையில் தயாராகிவரும் ‘1921 புழா முதல் புழா வரை’ என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம் வரும் செப்டம்பர் மாதத்தில் வெளி வர உள்ளது. ஹிந்துக்கள் மீதான இன ஒழிப்பு கலவரமான மாப்ளா கலவரத்தை சுதந்திர போர் என்பது போல் கட்டமைத்தனர் ஜிஹாதிகளும் அவர்களுக்கு துணையாய் இருந்தவர்களும். இந்த படம் அதனை உள்ளது உள்ளபடி வெளிப்படுத்தும் என எதிர்ப்பார்போம்.