திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள பொட்டல் கிராமத்தில் கேரள மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ டயோசீசனுக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு எம் சேண்ட் ஆலை வியாபாரம் நடத்துவதாகக்கூறி மணலைத் திருடி விற்றனர் கிறிஸ்தவ பாதிரிகள். அவர்களுக்கு சேரன்மகாதேவி சார்ஆட்சியர் ரூ. 9.50கோடி அபராதம் விதித்தார். மனுவல் ஜார்ஜ் உட்பட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் கிறிஸ்தவ பாதிரிகளான பிஷப் சாமுவேல் மார் ஏரேனியஸ், ஷாஜி தாமஸ், ஜார்ஜ் சாமுவேல், ஜோஸ் ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இவ்வழக்கில் சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய தி.மு.க இளைஞரணி அமைப்பாளராக குமார் என்பவரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் தற்போது கைது செய்தனர். இவரது மனைவி பூங்கோதை சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய தலைவராக பதவி வகிக்கிறார். குமார், ஆற்று மணல் கொள்ளை வழக்கில் கேரள மாநில பாதிரிகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.