பா.ஜ.க அபாரம்

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில், மொத்தமுள்ள 24 இடங்களில் பா.ஜ.க 10 இடங்களிலும் காங்கிரஸ் 10 இடங்களிலும் தி.மு.க ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. கூட்டணியாக போட்டியிட்டும் காங்கிரஸ் தி.மு.க கூட்டணியால் 11 இடங்களை மட்டுமே பெற முடிந்த்து. பா.ஜ.க தனித்து போட்டியிட்டு 10 இடங்களில் வென்றுள்ளது. இதைத்தவிர தெலுங்கு தேசம் கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றது. ஒரு பெண் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.  தற்போது அங்கு நகராட்சியை யார் கைப்பற்றுவது என்பதில் தெலுங்கு தேசம் கட்சி யாருடன் இணையப்போகிறது என்ற முடிவு முக்கிய பங்கு வகிக்கிறது.