புனே மாநகராட்சி வளாகத்தில், சத்ரபதி சிவாஜி சிலையைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 9.5 அடி உயரமுடைய இந்தச் சிலை 1,850 கிலோ ‘கன்மெட்டல்’ மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. பின்னர் மாநகராட்சியில் உள்ள சமூக சீர்திருத்தவாதி மகாத்மா ஜோதிராவ் புலே சிலைக்கும் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.