ஏர் இந்தியா விமானத்தில் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களை வரவேற்ற மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ஏ.என்.ஐக்கு அளித்த பேட்டியில், “மத்திய அரசு தனது கடமையை சரியாக செய்கிறது. எதிர்கட்சித் தலைவர்கள் கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்தபோதும் இது போன்ற சூழ்நிலைகள் பலமுறை வந்துள்ளன. இத்தகைய சூழலில் அவர்கள் எப்படி செயல்பட்டார்கள், என்ன செய்தார்கள் என்பதை சுயபரிசோதனை செய்ய வேண்டும். விமர்சனம் செய்வதால் மட்டும் அரசியல் களம் காண முடியாது. உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்த போது நாட்டு மக்களுக்கு என்ன செய்தீர்கள்? உக்ரைனில் சிக்கியுள்ள நமது குடிமக்களை மீட்க ‘ஆப்பரேஷன் கங்கா’ நடவடிக்கையில் விமானப் படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைவரையும் பாதுகாப்பாக அழைத்து வர முடியும். இதற்கு எந்த தேதியையும் நிர்ணயிக்க முடியாது. ஆனால் கடைசி குடிமகனை அழைத்து வரும் வரை எங்கள் நடவடிக்கை தொடரும். நான்கு மத்திய அமைச்சர்கள், இதற்காக உக்ரைன் எல்லை நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்’ என தெரிவித்தார்.