பாகிஸ்தானில் உள்ள இம்ரான் கான் அரசு, உக்ரைனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் மாணவர்களைக் கண்டுகொள்ளாமல் கைவிட்டுவிட்டது என்று விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், உக்ரைனில்உள்ள நெருக்கடியிலிருந்து தப்பிக்க பாகிஸ்தான் மாணவர்கள் பாரதத்தின் தேசியக் கொடியைப் பயன்படுத்தி தப்பிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், உக்ரைன் நாட்டின் எல்லையை பாதுகாப்பாக சென்றடைந்து வேறு நாட்டிற்கு செல்ல, ‘பாரத் மாதா கி ஜெய்’ என முழக்கங்களைஅவர்கள் எழுப்பினர். உக்ரைனில், பாரதக் கொடியுடன் செல்லும் வாகனங்களை ரஷ்யர்கள் ஏதும் செய்யமாட்டார்கள். அண்டை நாடுகளும் வழியைத் திறந்து விடும் என்பதால் அவர்கள் இவ்வாறு செய்கின்றனர். உக்ரைனில் உள்ள மெட்ரோ சுரங்கப்பாதைகளில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானிய மாணவர்கள், ‘பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்து யாரும் எங்களைக் காப்பாற்ற வரவில்லை. உணவு, தண்ணீர் இல்லாமல் சிக்கித் தவிக்கிறோம். பாகிஸ்தான் அரசு எங்களை கைவிட்டுவிட்டது. அனைத்து மாணவர்களையும் வெளியேற்றிவிட்டதாக தூதரகம் பொய் சொல்கிறது. பாரதம் உட்பட பல நாடுகளும் தங்கள் மக்களை வெளியேற்றுகின்றன, நாங்கள் பாகிஸ்தானியர்கள் என்பதுதான் எங்களின் ஒரே தவறு’ என்று கூறுகின்றனர்.