மஹா சிவராத்திரியை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நேற்று துவங்கி நடைபெற்றது. நேர்று முன் தினம் துவங்கிய இந்த சிவாலய ஓட்டத்தில் விடிய விடிய ஓடி பக்தர்கள் 12 சிவாலயங்களை வழிபட்டனர். சிவராத்திரியில் இரவு துாங்காமல் சிவனை ஓரிடத்தில் இருந்து வழிபடுவது வழக்கம். ஆனால் குமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் 12 சிவன் கோயில்களுக்கு பக்தர்கள் ஓடி சென்று வழிபடுகின்றனர். திருமலை சூலபாணி கோயில், திக்குறிச்சி சிவன் கோயில், திற்பரப்பு வீரபத்திரர் சிவன் கோயில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயில், பொன்மனை தீம்பிலேஸ்வரர் கோயில், பன்னிப்பாகம் கிராதமூர்த்தி சிவன் கோயில், கல்குளம் நீலகண்டசுவாமி கோயில், மேலாங்கோடு காலகாலர் சிவன் கோயில், திருவிடைக்கோடு கொடம்பீஸ்வரமுடையார் சிவன் கோயில், திருவிதாங்கோடு பிரதிபாணி சிவன் கோயில், திருபன்றிகோடு பக்தவச்சலர் சிவன் கோயில், திருநட்டாலம் சங்கரநாராயணர் கோயிலில் ஓட்டத்தை நிறைவு செய்வர். இக்கோயிலில் சிவனும் விஷ்ணுவும் ஒன்று என உணர்த்த சங்கர நாராயணராக இறைவன் காட்சித் தருகிறார். இதற்காக குமரி மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.