அரசு பள்ளி ஆசிரியர்களின் டியூஷன்

அரசு பள்ளி ஆசிரியர் பணியிட மாறுதல் தொடர்பான வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, ‘பிற அரசுத்துறை அலுவலர்களை ஒப்பிடும்போது ஆசிரியர்களுக்கான வேலை நாளும் நேரமும் குறைவு. எனவே, ஆசிரியர்கள் டியூஷன் எடுப்பது போன்ற பணிகளை பகுதிநேர வேலையாக செய்து வருகின்றனர். இது ஆசிரியர் சமூகத்தில் புற்றுநோயாகப் பரவி, பணம் சம்பாதிக்க வேண்டும் எனும் பேராசையை அதிகரித்துள்ளது. டியூசன் சென்டர் நடத்தும், வீடுகளில் டியூஷன் எடுக்கும் அரசு ஆசிரியர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாவட்டம் தோறும் சிறப்பு குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அரசு பள்ளி ஆசிரியர்கள் மீதான புகார்களை பெற தனி தொலைபேசி, அலைபேசி, வாட்ஸ்அப் எண்களை உருவாக்கி, விளம்பரப்படுத்த வேண்டும்’  என்று உத்தரவிட்டார்.