ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் வரலாற்றில் முதன்முறையாக மகா சிவராத்திரி விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலின் விளையாட்டு மைதானத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மகா சிவராத்திரி அன்று 100க்கும் மேற்பட்ட ஆன்மீக கலைஞர்கள் இணைந்து மார்ச் 1ம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 2ம் தேதி காலை 6 மணி வரை மங்கள இசை, சொற்பொழிவுகள், நாட்டிய நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், பக்தி பாடல்கள், கிராமிய இசை நிகழ்ச்சிகலை நடத்த உள்ளனர். ஆன்மீகம் தொடர்பான 10 கடைகள் அமைக்கபடும். பழநி பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட முக்கிய திருக்கோயில்களின் பிரசாதங்கள் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.