அசாமில் வாழும் பழங்குடியன மக்களை கிறிஸ்தவ மிஷனரிகள் பெரிய அளவில் மதமாற்றம் செய்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சம்பதர், லாங்டாங்குரி மற்றும் சுவாலி லுகுவா கால் ஆகிய மூன்று கிராமங்களில் வசிக்கும் 130 குடும்பங்களில் 128 பழங்குடியினக் குடும்பங்கள் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி அவர்களுக்கு முதலில் சில உதவிகளை செய்வதாக ஏமாற்றியதும். பிறகு குளிர் கலத்தில் அவர்களுக்கு இரண்டு மூட்டை அலுமினியத் தாள்கள், ஒரு ஜோடி துணிமணிகளை கொடுத்து கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றியதும் கண்டறியப்பட்டுள்ளது. இக்கிராமங்களில் 2 குடும்பங்கள் மட்டுமே இப்போது ஹிந்துக்களாக இருக்கின்றன. ஆனால் அவர்களும் மதம் மாறவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து வெளியாட்களுடன் பேச கிராம மக்கள் மறுக்கின்றனர்.. கிறிஸ்தவ மிஷனரிகள் அசாமில் ஏமாற்றுதல், ஆசைகாட்டுதல், ஏழ்மையை பயன்படுத்திக்கொள்வது, வஞ்சகம் போன்றவற்றால் பெரிய அளவிலான மத மாற்றத்தைத் தொடர்ந்து செய்கின்றன என்று உலக ஹிந்து கூட்டமைப்பு (அசாம்) குற்றம் சாட்டியுள்ளது.