டெல்லியில் உள்ள குதுப்மினார் வளாகத்தில் உள்ள 27 கோயில்களில் உள்ள ஹிந்து மற்றும் ஜெயின் தெய்வங்களின் விக்கிரகங்களை மீட்டெடுக்க வேண்டும். அந்த வளாகத்தில் ஹிந்துக்களும் ஜைன மதத்தினரும் தங்கள் மத உரிமையைப் பயன்படுத்த வழி வகுக்க வேண்டும் எனக் கோரி கடந்த வருடம் நவம்பரில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அதனை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி ‘கடந்த காலங்களில் தவறுகள் நடந்ததை யாரும் மறுக்கவில்லை, ஆனால் இதுபோன்ற தவறுகள் நமது நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் அமைதியைக் குலைப்பதற்கு அடிப்படையாக இருக்கக்கூடாது” என கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. இதனை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், இதுகுறித்த அறிக்கிய தாக்கல் செய்ய தொல்லியல் ஆய்வுத்துறைக்கு உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த விசாரணையை மே 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.