ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, “ஏகம் பாரதம்” என்று பெயரிடப்பட்ட சர்வதேச தாய்மொழி தின நிகழ்வுடன் கலாச்சார மாலை நிகழ்ச்சியும் டெல்லியில் நடத்தப்பட்டது. இதில், கிராமி விருது வென்ற ரிக்கி கேஜ் மற்றும் ஆஸ்கார் போட்டியாளர் பிக்ரம் கோஷ் ஆகியோரால் இசையமைக்கப்பட்ட “வந்தே பாரதம்” சிக்னேச்சர் டியூன் வெளியிடப்பட்டது. கலாசாரம் மற்றும் வெளிவிவகாரத்துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி இதனை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், வந்தே பாரதம் பாடலின் இசையமைப்பாளர்களின் கண்கவர் நேரடி நிகழ்ச்சிகள் அனைவரையும் மயக்கியது. ‘வந்தே பாரதம்’ பாடல் 2022 குடியரசு தின நிகழ்வில் டெல்லி ராஜ்பாத்தில் நடந்த வந்தே பாரதம் நாட்டிய நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.