இஸ்லாமிய உறுப்பினர் கொலை

மமதா பானர்ஜி தலைமையிலான அரசு அட்சி செய்துவரும் மேற்குவங்க மாநிலத்தின் ஹவுரா மாவட்டத்தில் உள்ள அம்தாவில் இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ஐ.எஸ்.எப்) என்ற இஸ்லாமிய அமைப்பின் மாணவர் அணித் தலைவர் அனிஷ் கான்  மமதா பானர்ஜியின் அரசுக்கு எதிராக 130 நாட்கள் போராட்டம் நடத்தினார்.  இதனையடுத்து, அம்மாநில காவல்துறையினர், கடந்த பிப்ரவரி 18 அன்று இரவு விசாரணை என்ற பெயரில் அவரது வீட்டின் மூன்றாம் மாடிக்கு அழைத்துச்சென்று அங்கிருந்து தள்ளிக் கொன்றனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காவல்துறையின் இந்த அராஜகப் போக்கைக் கண்டித்தும் மமதா பானர்ஜிக்கு எதிராகவும் இடதுசாரிகள் போராட்டம் நடத்தினர். இதனை பொறுத்துக்கொள்லமுடியாத மமதா அரசு, காவல்துறையை ஏவி தடியடி நடத்தியது. 100க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்தது. ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில், இடதுசாரி அமைப்புகளின் மாணவர்களுக்கும், திருணமூல் கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. முன்னதாக, இந்த படுகொலையைக் கண்டித்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பும் போராட்டங்களை நடத்தியது.