நாடாளுமன்றத்தின் மக்களவை மாநிலங்களவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் மத்திய அரசின் அதிகாரபூர்வ சன்சத் தொலைக்காட்சியின் யூடியூப் கணக்கை யூடியூம் நிறுவனம் முடக்கியுள்ளது. ‘யூடியூப் சமூக வழிகாட்டுதல்களை மீறி செயல்பட்டதாகவும் அதனால் நிறுத்தப்பட்டதாகவும் இதற்கு காரணம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், எந்த வழிகாட்டுதல்கள் மீறப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையே, சன்சத் டிவியின் யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டு அதன் பெயர் ‘எதிரீயம்’ என மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.