ஸ்ரீராமர் கோயில் 3டி படம்

ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை,  தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர்  பக்கத்தில், முழுமையான ஸ்ரீராமர் கோயிலின் அழகான 3டி அனிமேஷன் வீடியோவை  வெளியிட்டது. அயோத்தியில் உள்ள ஸ்ரீராம ஜென்மபூமி கோயில், முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட நிலையில், அது எப்படி இருக்கும் என்று இதில் நாம் பார்க்க முடியும். அழகான கோயில், அதன் இருப்பிடம், முகப்பு, நுழைவாயில், பெரிய தூண்கள், மண்டபம், தோட்டம் என அனைத்தும் இதில் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணைப்பை https://twitter.com/ChampatRaiVHP என்ற டுவிட்டர் முகவரியிலும் காணலாம். முன்னதாக சில மாதங்களுக்கு முன், கோயில் எப்படி கட்டப்படுகிறது என்ற 3டி அனிமேஷன் வீடியோ வெளியிடப்பட்டது நினைவு கூரத்தக்கது.