மாநகராட்சித் தேர்தலில் வன்முறை

மேற்கு வங்க மாநிலத்தில் பிதான்நகர், சந்தன்நகர், அசன்சோல், சிலிகுரி ஆகிய மாநகராட்சிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவுடன் தேர்தல்கள் ‘அமைதியாக’ நடைபெற்றதாக பெரும்பாலான ஊடக நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால், இந்த வாக்குச் சாவடிகள் அமைந்திருக்கும் பகுதிகளில் கிடைத்துள்ள வீடியோ காட்சிகள் உண்மை வேறுவிதமாக உள்ளதைத் தெரிவிக்கிறது. ஆயுதம் ஏந்திய குற்றவாளிகளின் வன்முறைகள், துப்பாக்கிச் சூடுகள், மூங்கில், தடியடிகளை ஏந்தி “கேலா ஹோப்” என்ற முழக்கமிட்டபடி தெருக்களில் திரியும் வன்முறை கும்பல்கள் என பல வீடியோ காட்சிகள், புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பல வாக்குச்சாவடிகள் பகிரங்கமாக கைப்பற்றப்பட்டுள்ளன. யாரையும் வாக்களிக்க விடாமல் போலி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். காவல்துறையினரும் அதிகாரிகளும் ஆளும் கட்சியின் குண்டர்களுக்கு துணையாக செயல்படுகின்றனர் என பொதுமக்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.