குருகிராமில் நடைபெற்ற பணியாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் (இ.எஸ்.ஐ.சி) 187வது கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், ‘தொழிலாளர்களின் தொடர் உடல்நலப் பரிசோதனைக்காக தொழிற்சாலைகள், சிறு, குறு, நடுத்தர தொழில் குழுக்களுடன் இ.எஸ்.ஐ.சி மருத்துவமனைகள் ஒருங்கிணைக்கப்படும். டாக்டர்கள், ஊழியர்களின் ஊதியம் இ.எஸ்.ஐ.சி மூலம் திருத்தப்படும், நிலுவையில் உள்ள திட்டங்கள் துரிதப்படுத்தப்படும்’ என தெரிவித்தார். மேலும், காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வு மற்றும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஊதிய தரவுகளின் சமீபத்திய அறிக்கைகளை மேற்கோள் காட்டி பேசிய அவர், நாட்டில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும், அமைப்பு மற்றும் அமைப்புசாரா துறைகளில் உள்ள தொழிலாளர்களின் நலனில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது என்றும் கூறினார்.