மதவெறி கும்பல் அட்டகாசம்

கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம், நல்லூர் கிராமத்தில் வசிக்கும் திலீப் மாலாகிமானே என்ற ஹிந்து இளைஞர், ஹிஜாப் மீதான அரசின் தடையை ஆதரித்து ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பதிவிட்டிருந்தார். இதனால், ஆத்திரமடைந்த முஸ்லிம் மதவெறி கும்பல் ஒன்று, திலீப் தனது அவரது கடையிலிருந்து வெளியே இழுத்துச் சென்று, கொடூரமாக தாக்கி கத்தியால் குத்தியது. பாதிக்கப்பட்டவரை மீட்க சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும் அந்த மதவெறி கும்பலால் தாக்கப்பட்டனர். இதில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களில் சிலரை காவல்துறை கைது செய்துள்ளது. மலேபென்னூர் நகரம் அமைந்துள்ள ஹரிஹார் தாலுகா முழுவதும் தடை உத்தரவு போடப்பட்டது. இதேபோல, தாவணகெரே மாவட்டம் நல்லூர் கிராமத்திலும் ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது, அங்கு மற்றொரு முஸ்லிம் மதவெறி கும்பல் ஒன்று 25 வயதான நவீன் மற்றும் அவரது தாயார் சரோஜம்மா ஆகியோரைத் தாக்கியது. ஹிஜாப் குறித்த நவீனின் சமூக ஊடக பதிவுகளுக்காக அவரது வீட்டை சூறையாடியது. ஹரிஹர் தாலுகாவில் டவுன் காவல் நிலையத்திற்கு வெளியே வன்முறை போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் காவல்துறை வாகனத்தை அடித்து நொறுக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.