செந்தில் பாலாஜி வழக்கு

கடந்த 2015ல் செந்தில் பாலாஜியும், அவரது நண்பரும் தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 40 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு, வேலை வாங்கித்தராமல் ஏமாற்றியதாக பாதிக்கப்பட்ட ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பிறகு, செந்தில் பாலாஜி உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு தொடுத்தவருடன் சமரசமாகி விட்டதாக செந்தில் பாலாஜி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அப்போதே இந்த நீதிமன்ற உத்தரவு குறித்து பல கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.