சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த முத்து நடராஜன், 2015ல் புத்திர கவுண்டன்பாளையத்தில், மலேஷியாவில் உள்ள முருகன் சிலையை போன்று ஒரு சிலையை அமைக்க முடிவு செய்தார். இதற்காக, மலேஷியாவில் முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூர் ஸ்தபதி தியாகராஜனை அழைத்து வந்து உலகில் பெரிய முருகன் சிலையை ஆத்தூரில், 3 கோடி ரூபாயில் கட்ட முடிவு செய்தார். 2016ல் பூமிபூஜை போட்டு பணிகள் துவக்கப்பட்டன. 2018ல் முத்துநடராஜன் மறைந்தார். இருந்தபோதும் அவரது மகன்களும் மகளும் இப்பணியை தொடர்ந்தனர். தற்போது பணிகள் முழுமை பெற்றுள்ளதால், வரும் ஏப்ரல் 6ல் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சிலை, 20 அடி உயர பீடம், 126 அடி உயர முருகன் சிலை என மொத்தம் 146 அடி உயரத்தில், ஏழு கோண வடிவமைப்பில் அமைக்கப்பட்டு உள்ளது.