பாரதம், ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென் கொரியா, ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 13 நாட்டு தலைவர்கள் குறித்து, அமெரிக்காவை சேர்ந்த, ‘மார்னிங் கன்சல்ட்’ என்ற தகவல் ஆய்வு நிறுவனம், கருத்துக் கணிப்பு நடத்தியது. கருத்து கணிப்பு முடிவுகளின்படி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 72 சதவீத ஆதரவு பெற்று தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முன்னிலை வகிக்கிறார். அடுத்ததாக மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடார் 64 சதவீத ஆதரவுடன் இரண்டாம் இடமும், இத்தாலி பிரதமர் மரியோ திராகி 57 சதவீத வாக்குகளுடன் மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர். 26 சதவீத ஆதரவுடன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.