காங்கிரஸ் தலைமையால் சமீபத்தில் பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பஞ்சாபின் தற்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி சர்ச்சைகளுக்கு புதியவர் அல்ல. சமீபத்தில்கூட அவரது குடும்பம் மணல் கடத்தல், ஊழல் குற்றச்சாடுகளில் சிக்கியது. இந்த நிலையில் தற்போது பஞ்சாபில் அவர் மீது ஒரு பரபரப்பான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. சமீபத்தில் அவர் தலைமை விருந்தினராக கலந்துகொண்ட கிறிஸ்தவ போதகர் பல்ஜிந்தர் சிங்கின் மதமாற்ற நிகழ்ச்சியில், “சீக்கிய சமூகத்தின் அன்பு கிடைக்காததால் சீக்கியர்கள் மதம் மாறுகின்றனர்” என மத மாற்றத்தை ஆதரித்து பேசியிருந்தார். சில நாட்களுக்கு முன், சரண்ஜித் சிங் சன்னி, கிறிஸ்தவராக ஞான ஸ்னானம் பெற்றதாக ஒரு வீடியோ வெளியானது. அப்போதே அவர் மதம் மாறியவர் என பஞ்சாபில் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து சுதர்சன் டிவியின் தலைமை ஆசிரியர் வெளியிட்ட ஒரு பதிவில், சரண்ஜித் சிங் சன்னியின் மனைவியின் பின்புற சுவரில் கிறிஸ்தவ சிலுவை தொங்கவிடப்பட்டிருக்கும் படம் இடம் பெற்றிருந்தது. சரண்ஜித் சிங், நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் கிறிஸ்தவ குழுவில் இணைந்து ‘அல்லேலூயா அல்லேலூயாஜா’ என்று கூச்சலிடும் வீடியோவும் வெளியாகியுள்ளது.