அமெரிக்காவில் வள்ளுவர் தெரு

திருவள்ளுவரை கௌரவிக்கும் வகையில் அமெரிக்காவில் வெர்ஜினியா மாநிலத்தில் உள்ள பேர்பேக்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு தெருவிற்கு ‘வள்ளுவர் தெரு’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.வர்ஜீனியா பகுதியில் தமிழ்ப்பள்ளி நடத்தி வரும் வள்ளுவன் தமிழ் மையத்தின் முயற்சியால் இது நடந்துள்ளது.இதுகுறித்து கருத்துத் தெரிவித்த வெர்ஜினியா மாநிலங்கள் அவை உறுப்பினர் டெல் டான் ஹெல்மர், ‘தமிழ் சமூக உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன். புகழ்பெற்ற கவிஞர் வள்ளுவர் பெயரில் அமெரிக்காவில் முதல்முறையாக வள்ளுவர் தெரு என பெயர் சூட்டப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.