மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பா.ஜ.க தலைவர் கிரித் சோமையாவை கொல்லும் நோக்கத்தில் சிவசேனா கட்சியின் குண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.பாதுகாப்பு காவலர்களால் அவர் காப்பாற்றப்பட்டார்.அவரை காப்பாற்ற முயன்ற காவலரும் பலத்த காயம் அடைந்தார்.தற்போது, எலும்பு முறிவுகள், பலத்த காயங்களுடன் புனேவில் உள்ள சஞ்செட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கிரித் சோமையா.பா.ஜ.கவினர் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சிவசேனாவை மகாராஷ்டிர பா.ஜ.க எச்சரித்துள்ளது.அண்மைக் காலத்தில் கிரித் சோமையா மீது நடத்தப்படும் நான்காவது தாக்குதல் இது. சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்தின் 55 லட்சம் மோசடி, முதல்வர் உத்தவ் தாக்ரேயின் தனிச்செயலாளர் மிலிந்த் நர்வேகரின் சட்டவிரோத ரிசார்ட், அமைச்சர் அனில் பராப்பின் சட்டவிரோத ரிசார்ட், என்.சி.பி அமைச்சர் ஹசன் முஷ்ரிப்பி மருமகனுக்கு வழங்கப்பட்ட சட்டவிரோதமான ஒன்பதாயிரம் கோடி ஒப்பந்தம், சிவசேனா எம்.பி பாவ்னா கவாலியின் ஆயிரம் கோடி ஊழல் போன்றவைகளை அவர் வெளிப்படுத்தியதால் அவரை பழிவாங்க சிவசேனா கூட்டணி தொடர்ந்து முயற்சித்து வருகிறது.