பிரதமரின் ஏழைகள் நலவாழ்வுத் திட்டமான கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஐந்து கட்டங்களாக ரூ. 2.6 லட்சம் கோடி உணவு மானியம் வழங்கப்பட்டு உள்ளது. இதன்படி, 759 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், சுமார் 80 கோடி பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். அவர்கள் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் ஏற்கனவே பெற்றுவரும் உணவு தானியங்களுக்கு கூடுதலாக, ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு 5 கிலோ என்ற அளவில் உணவு தானியங்களை இலவசமாகப் பெறுகின்றனர் என மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே தெரிவித்துள்ளார்.