டி.ஆர்.பி வழக்கு ஒரு சதி

ரிபப்ளிக் டிவி மீதான டி.ஆர்.பி வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது, இந்த வழக்கில் ரிபப்ளிக் டிவியை முடக்க வேண்டும், அதன் தலைவர் அர்னாப் கோஸ்வாமியை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என்று அப்போதைய உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் விரும்பினார் என்று மகாராஷ்டிர முன்னாள் காவல்துறை ஆணையர் பரம் பீர் சிங் அமலாக்க இயக்குனரக விசாரணையில் ஒப்புக்கொண்டார். முன்னாள் காவல்துறை அதிகாரி சச்சின் வாஸ், டி.சி மோட்டார்ஸ் வழக்கு, கிரிக்கெட் பந்தய வழக்கு உள்ளிட்ட மற்ற வழக்குகளுடன் டி.ஆர்.பி வழக்கிலும் அப்போதைய உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கிடம் அறிவுறுத்தல்களைப் பெற்றார். இது அரசியல் சதியின் ஒரு பகுதி என்று குற்றம் சாட்டினார். இதன் மூலம், பாரதத்தில் வேகமாக வளர்ந்து வரும் பிரபல தேசிய செய்தி நிறுவனமான ரிபப்ளிக் டிவியை முடக்கும் நோக்கில், மகாராஷ்டிர அரசு அதன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.