தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் , “மக்களின் வளர்ந்து வரும் அபிலாஷைகளுக்கு ஏற்றவாறும், நாட்டின் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கும் முற்றிலும் புதிய அரசியலமைப்பை பாரதம் உருவாக்க வேண்டும். மாநிலத்தின் அதிகாரங்களை மத்திய அரசு அபகரிப்பதைத் தடுக்க புதிய அரசியலமைப்புச் சட்டம் மட்டுமே ஒரே வழி. உலகின் பல நாடுகளும் தங்கள் அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்துள்ளன, அதே வழியில், இங்கும் செய்ய வேண்டும்” என சமீபத்தில் கூறியிருந்தார்., இதையடுத்து மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, தெலுங்கானா மாநில முதல்வரை கடுமையாக சாடியதுடன், அவர் தேவையற்ற கருத்துகளை வெளியிட்டு அரசியலமைப்பை அவமதித்துள்ளார். “டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரையும் அரசியலமைப்பையும் சந்திரசேகர ராவ் ஒருங்கே அவமதித்துள்ளார். அரசியல் சாசனம் பற்றி அவர் என்ன சொன்னாலும் பாரத அரசின் சார்பில் நான் அதனை கண்டிக்கிறேன்” என்று கூறினார். அம்பேத்கரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்திவரும் பல தமிழகக் கட்சிகள்கூட இதுகுறித்து இதுவரை வாய் திறக்கவில்லை என்பது சற்றே சிந்திக்கத்தக்கது.