மடியில் கனம்; வழியில் பயம்

மைக்கேல்பட்டி தூய இருதயர் மேல்நிலைப் பள்ளி அளித்த கிறிஸ்தவ மதமாற்ற அழுத்தத்தால் தஞ்சை மாணவி தற்கொலை செய்துகொண்டார். இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி உத்தரவிட கோரி மாணவியின் தந்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதனையடுத்து வழக்கை சி.பி.ஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க தடை விதிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

தற்போதே இவ்வழக்கில் மதமாற்றம் குறித்த ஆணித்தரமான வீடியோ ஆதாரம், பள்ளியின் விடுதி உரிமம் புதுப்பிக்கப்படாதது, பெற்றோர் உள்ள குழந்தையை ஆதரவர்றோர் இல்லத்தில் சேர்த்தது, அதற்கு பெற்றோரிடமே கட்டணம் வாங்கியது, நன்கொடையில் செயல்படும் அமைப்பு முறைகேடாக கட்டணம் வசூலித்தது, சித்தி கொடுமைப்படுத்தியதாக சைல்டு லைனுக்கு போன் வந்ததாக தில்லுமுல்லுகள் என பல்வேறு முறைகேடுகள் இவ்வழக்கில் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சி.பி.ஐ விசாரித்தால் அவ்வளவுதான். கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாகிவிடும் என்பதால் கிறிஸ்தவ அமைப்புகள் பதறுகின்றன. மேலும், தேசம் தழுவிய அளவில் மதமாற்றத் தடைசட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு ஒன்றும் தொடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வழக்கில் தமிழக அரசுக்கு என்ன இவ்வளவு அக்கறை, தி.மு.க அரசுக்கு இதைத்தவிர வேறு வேலைகள் இல்லையா, ஏன் இவ்வளவு முட்டு கொடுக்கப்படுகிறது? என பல கேள்விகள் மக்களிடம் எழுந்துள்ளன. இந்த கேள்விகளுக்கு பதில் ஏற்கனவே இவர்களால் பொதுமேடைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘தி.மு.க ஆட்சிக்கு வந்ததே சிறுபான்மையினர் போட்ட பிச்சைதான்’ என பாதிரி ஜார்ஜ் பொன்னையா கூறியிருந்தார். அதனை தன் பாணியில் ‘இது உங்களால் அமைந்த அரசு’ என தென்னிந்திய திருச்சபை பவள விழாவில் வழிமொழிந்தார் தி.மு.க அரசின் முதல்வர் ஸ்டாலின். இப்போது புரிகிறதா தமிழக அரசு தற்போது கிறிஸ்தவ அமைப்புகளுடன் இணைந்து ஏன் இவ்வளவு பதறுகிறது என்று?

மதிமுகன்