குடியரசு தினத்தன்று மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஆணையர் தலைமையில் நடைபெற்ற விழாவில், பாப்புலர் பிரிண்ட் ஆஃப் இந்தியா (பி.எப்.ஐ) என்ற முஸ்லிம் பயங்கரவாத ஆதரவு அமைப்பிற்கு ‘சமூகசேவை விருது’ வழங்கப்பட்டது. இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. சி.ஏ.ஏ வன்முறை கலவரம், ஹத்ராஸ் வன்முறை தூண்டல், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ்க் இ முகமது உள்ளிட்ட பல பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்பு, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள், பா.ஜ.க பிரமுகர்களின் மீதான கொலை முயற்சிகள், பணமோசடி, கடத்தல் வழக்குகள், போதை மருந்து என இந்த அமைப்பின் மீது இல்லாத தேசதுரோகக் குற்றச்சாட்டுகளே இல்லை எனலாம். இந்நிலையில், அந்த அமைப்பிற்கு வழங்கப்பட்ட சமூகசேவை விருதை திரும்பப் பெறக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணி சார்பில் மனு அளிக்கப்பட்டது.