தடைசெய்யப்பட்ட முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான ஜமாத் இ இஸ்லாமியை ஆதரித்த காரணத்திற்காக மீடியாஒன் என்ற செய்தி சேனலை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தற்காலிகமாக முடக்கியது என தகவல்கள் தெரிவிக்கின்றன. சேனலுக்கு பாதுகாப்பு அனுமதி கிடைக்கவில்லை. எனவே, தேச பாதுகாப்பு காரணங்களுக்காக திங்கள்கிழமை நண்பகல் முதல் அந்த சேனலின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது என அரசு தெரிவித்துள்ளது.. தொலைக்காட்சி சேனலின் உரிமம் காலாவதியாகவில்லை, உரிமத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது, தடைக்கு எதிராக சட்ட நடவடிக்கையை தொடங்கப்பட்டு உள்ளது என சேனல் வட்டாரங்கள் தெரிவித்தன. கேரள உயர்நீதிமன்றத்தில் இந்த முடக்கம் தொடர்பாக சேனல் நிறுவனத்தால் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், அரசின் தடைக்கு 2 நாட்கள் இடைக்கால தடை விதித்தது. அரசு இது குறித்து விளக்கமளிக்கவும் உத்தரவிட்டது. இந்த செய்தி சேனல், ஏற்கனவே ஒருமுறை தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020ல் ‘டெல்லியில் நடைபெற்ற சி.ஏ.ஏ வன்முறை கலவரத்தை கவரேஜ் செய்வதாககூறி வகுப்புவாத வன்முறையை மேலும் தூண்ட முயற்சித்தது. இதனையடுத்து இந்த சேனல் 48 மணிநேரத்திற்கு மத்திய அரசால் தடைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.