தமிழகத்தின் தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளியின் கிறிஸ்தவ மதமாற்றத் தொந்தரவால், அரியலுாரை சேர்ந்த 17 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தேசம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கிறிஸ்தவ அமைப்புகளும் தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும் இவ்வழக்கை நீர்த்துப்போக வைக்க பல முயற்சிகளை மேற்கொண்டன. அரசியல்வதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள் என பல தரப்பிலும் பல முயற்ச்சிகள் இதற்காக மேற்கொள்ளப்பட்டது. பா.ஜ.கவும் ஹிந்து அமைப்புகளும் மட்டுமே அந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு தொடர்ந்து குரல் கொடுத்தன. புகாரின் அடிப்படையில், தேசிய குழந்தைகள் ஆணையமும் இவ்வழக்கை விசாரித்து வருகிறது. இவ்வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்நிலையில், டெல்லியில், பா.ஜ.க தொண்டர்கள், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) அமைப்பை சேர்ந்தவர்கள் இதற்காக பழைய தமிழ்நாடு இல்லம் முன்பாக அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் தொடர்ந்து கட்டாய மதமாற்றங்கள் நடைபெறுவதால், மத மாற்றத்தடை சட்டத்தை அமல்படுத்த இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.